சென்னை, ஏப்.20: 4 நாள் தொடர் விடுமுறைக்காக சொந்தஊர் சென்றவர்கள் திரும்புவதற்காக 1500 கூடுதல் பேருந்துகள் நாளை மாலை முதல் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கடந்த 17-ந் தேதியில் இருந்து 4 நாள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் தங்கி இருக்கும் வெளியூர் வாசிகள் சொந்த ஊர் சென்றுள்ளனர். 17-ந் தேதி அன்று கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

சிலர் பேருந்து கூரைகளில் ஏறி பயணம் செய்தனர். இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் ஆரணி, திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 1500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.