செங்குன்றம், ஏப்.20:
மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள யுனிவர்சல் குடோனில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இங்கு குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் மின்னணு கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.

தீ மளமளவென எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மதியம் 1 மணி வரை தீ எரிந்து கொண்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.