சென்னை, ஏப்.20: கடலூர், தர்மபுரி, திருவள்ளூர் ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற சில கட்சிகளின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்ய பிரதா சாகு கூறியிருக்கிறார்.

இந்த 3 மக்களவை தொகுதிகளில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எனவே மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இன்று மாலைக்குள் அறிக்கை அனுப்புகிறார்கள்.

இந்த அறிக்கை கிடைத்ததும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியிருக்கிறார்.