செங்குன்றம், ஏப்.20: செங்குன்றம் அருகே மீஞ்சூர் அருகே நகைக்கடைக்குள் புகுந்து 50சவரன் நகைகள் மற்றொரு இடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 நகைகளையும் ரூ. 50 ஆயிரம் பணத்தையும் மர்ம  ஆசாமிகள் கொள்ளைடித்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொன்னேரி அருகே உள்ள மீஞ்சூர் மார்க்கெட் பகுதியில் துளசி நகைக்கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருபவர் கமல் (வயது45 ).இவர்கள் நகைக்கடையும் துணிக்கடையும் அருகருகே உள்ளதால் இரண்டு கடைகளையும்இ வர் சேர்த்து பார்த்து வருகிறார்.

நேற்று சித்ரா பௌர்ணமியையொட்டி இவரது துணிக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.அப்போது இரவு 8மணியளவில் நகைகடையில் இருந்த கமல் துணிக்கடைக்கு வந்துள்ளார். அப்போது இந்த சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டு இருந்த மர்மஆசாமிகள் நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை அள்ளிச்சென்றனர். அப்போது நகைக்கடையை கவனித்த கமல் கடையிலிருந்து 2பேர் ஓடுவதை பார்த்து சத்தம்போட்டார்.

அதற்குள் மர்ம ஆசாமிகள் ஓடி விட்டனர்.  இதுகுறித்து அவர் கொடுத்த புகார் தொடர்பாக மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து களவு போன நகைகளை சோதனை செய்த போது 50சவரன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் செங்குன்றம் அருகே அழிஞ்சி வாக்கம்  செல்வ விநாயகர் கோவில் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன். வழக்கறிஞரான இவரது தாய் மறைந்து விட்டாராம். அவருக்கு திதி கொடுப்பதற்காக வாசுதேவன் அவரது குடும்பத்துடன் மதுராந்தகம் அருகே செய்யூருக்கு கடந்த 14ம்தேதி சென்று விட்டு இன்று வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து அவர் கொடுத்து புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த இரு சம்பவங்களில் மொத்தம் 70 சவரன் நகைகள் மற்றும் ரூ. 50ஆயிரம் ரொக்கம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார்தேடி வருகின்றனர்.