திருவள்ளூர், ஏப். 20: திருவள்ளூர் பேரம்பாக்கம் அடுத்த காவாங்கொளத்தூர் சாலை முந்திரி தோப்பு அருகே அமைந்துள்ள ஓம் ஸ்ரீ தாய் நாகாத்தம்மன் ஆலயம். இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு நேற்று காலை அருள்வாக்கு சித்தர் இளம் துறவி ஸ்ரீ. நீதி அம்மா அருள் ஆசியுடன் பெண் பக்தர்கள் விரதமிருந்து 1008 பால் குடம் ஏந்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. மாலை தீ மிதித்தல் இரவு அம்மன் ஊஞ்சல் தாலாட்டு வீதிவுலாவும் நடைபெற்றது.