தாம்பரம். ஏப். 20:b பல்லாவரம் அருகே இறைச்சி கடை நடத்தி வந்தவர் 3 பேர் கொண்ட மர்ம் கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீசார் மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-  சென்னையை அடுத்த பல்லாவரம் அருகேஉள்ள நாகல்கேணி ஆதம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 45). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் மகளும் மகனும் உள்ளனர். இவர் திருநீர்மலை நாகல்கேணி சாலையில் பன்றி இறைச்சி பக்கோடா கடை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் கடை யில் இருந்த சீனிவாசனை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்யும் நோக்கத்தில் வந்து சுற்றி வளைத்துள்ளது.

இதை பார்த்த சீனிவாசன் அவர்களிடமிருந்த தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் சீனிவாசனை விடாமல் துரத்தி வந்து அவரது வீட்டு அருகே ஓட ஓட இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்து தகவலின்படி சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பன்றிகளை வளர்ப்பவர்களுக்கு தெரியாமல் சீனிவாசன் பன்றிகளை பிடித்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் திருநீர்மலை பகுதியை சேர்ந்த பன்றி வியாபாரிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறைச்சி கடைக்காரரை அடித்து கொலை செய்து விட்டுதப்பியோடிய 3பேர் கொண்ட மர்ம ஆசாமிகளை சங்கர் நகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இறைச்சி கடைக்காரர் ஓட ஓட விரட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.