ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா

ஆன்மீகம்

அம்பத்தூர், ஏப்.20: அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா ஆலய தலைமை பூசாரி அம்பிகாபதி பிள்ளை தலைமையில் வெகு சிறப்பாக நடை பெற்றது.

ஆலய தர்மகர்தா சுந்தரமூர்த்தி, ஆலய பூசாரி சக்திபாலாஜி ஆகியோர் முன்னிலையில் மூலவர் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசன திரவியங்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு பாதாம், ஏலக்காய், லவங்கம் மற்றும் மலர் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.
அத்துடன் பக்தர்கள் நெய்தீபம் ஏற்றியும், பொங்கல் வைத்தும் , அர்ச்சனை செய்தும் தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர்.

இதணைத்தொடர்ந்து அம்மன் உற்சவருக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் ஆலய மாடவீதி உலா நடை பெற்றது.

இதில் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முடிவில் ஆலயம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர்.