காஞ்சிபுரம், ஏப்.20: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு அறையை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் காஞ்சிபுரம் தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் யோகேஷ் பி மகசி , திருப்போரூர் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் மஜீனுõர் உறீசைன், முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பா. பொன்னையா தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட கலெக்டர் பா. பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

பாதுகாப்பு அறையை 24 மணி நேரம் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் இவற்றினை மூன்று அடுக்கு பாதுகாப்பாக பாதுகாக்கப்படுகிறது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும் இரண்டாவது அடுக்கில் ரிசர்வ் போலீசாரும் மூன்றாவது அடுக்கில் மாவட்ட காவல் துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

எட்டு மணி நேரத்திற்கு 270 பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பா. பொன்னையா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் உறதிமானி காஞ்சிபுரம் சார் ஆட்சியர் செ. சரவணன் அவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஸ்ரீதர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.