பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

முதலில் விளையாடி பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடி டெல்லி அணி வீரர்கள் துவக்கம் முதலே மிக நிதானமான ஆட்டத்தை கையாண்டனர்.

மெது மெதுவாக இலக்கை நோக்கி ஸ்கோரை உயர்த்திய டெல்லி அணி வீரர்கள், 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தனர். இதன் மூலம் இந்த போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார்.