சென்னை,ஏப்.21:10 வாக்குசாவடி மையங்களில் மறுவாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் 38 மக்களவை மற்றும் 19 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இதில் தருமபுரி தொகுதிக்குட்பட்ட சில வாக்குசாவடிகளில் முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதே போன்று திருவள்ளூர், கடலூர் தொகுதிகுட்பட்ட சில வாக்குசாவடி மையங்களிலும் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக கூட்டணி கட்சி சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடித்ததில் தருமபுரியில் 8, கடலூர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் தலா 1 வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவு நடத்த பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.