கொழும்பு, ஏப்.21: இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று காலை முதல் அடுத் தடுத்து நடந்து வரும் குண்டு வெடிப்பால் நகரமே வெடித்து சிதறிக்கொண்டிருக்கிறது
தேவாலயங்கள், ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 170 பலியாகி இருப்பதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈஸ்டர் திருநாளான இன்று தேவாலயங்களையும், நட்சத்திர ஓட்டல்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் இலங்கை மக்கள் மீளமுடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொழும்பு நகரின் வடக்குப்பகுதி யில் சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல்கள் குண்டுவெடிப்பால் சின்னாபின்னமாகி கிடக்கின்றன. இறந்தவர்களில் 30க்கும் அதிகமா னோர் வெளிநாட்டினர் என்று தெரியவந்துள்ளது.

மதியத்திற்கு பிறகு மேலும் 2 இடங்களில் குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ தளபதிகள் அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசியதை தொடர்ந்து நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இரவில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிபர் சிறிசேனா தொலைக்காட்சி யில் ஆற்றிய உரையில் நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தகைய கொடூர தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து எந்த துப்பும் துலக்க முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது.

கொச்சு கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நொகொம்போ என்ற இடத்தில் உள்ள புனித செபஸ்டியார் தேவாலயம் ஆகியவை குண்டுவெடிப்பில் சின்னாபின்னமாகி கிடக்கின்றன. 5 நட்சத்திர ஓட்டல் களான சாங்கிரிலால், சின்னமான் கிரான், கிங்ஸ்பரி ஆகியவை குண்டு வெடிப்பால் உருக்குலைந்து உள்ளன.

கொழும்பு மட்டுமின்றி மட்டக்கிளப்பில் உள்ள ஓட்டல்களும் சின்னா பின்னமாகி கிடக்கிறது. இந்த குண்டுவெடிப்பு தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாகவும், துயரமான இந்த நேரத்தில் உறுதிப்படுத்தப்படாத எந்த தகவலையும் யாரும் வெளிப்படுத்த வேண்டாம் என அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கோழைத்தனமான இந்த தாக்குதலுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.