திருச்சி, ஏப்.21: திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் இன்று காலை சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
கருப்பசாமி கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு படிக்காசு வழங்கும் விழாவில் இந்த சோக சம்பவம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையத்தில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முத்தையாம்பாளையத்தில் உள்ளது கருப்பசாமி கோவில். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, படிக்காசு வழங்கும் வைபவம் நடந்தது. இப்பகுதியில் பிரபலமான இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

படிக்காசு வழங்கும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் சிக்கி நான்கு பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்தப் பரிதாப சம்பவத்தில், படுகாயத்துடன் 10 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் சு.சிவராசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.