சென்னை, ஏப்.21: தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகையை யொட்டி, கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு  சென்னை சாந்தோம் பேராலயத்தில், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நள்ளிரவு சிறப்பு வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்றிரவு இரவு 8 மணிக்கு ஆரம்பித்த சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நீடித்தது.