ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதல்: 45 பேர் காயம்

தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை, ஏப்.21: உளுந்தூர்பேட்டை அருகே இன்று காலை நான்கு ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 45 பயணிகள் காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்தும், நெல்லையில் இருந்தும் நேற்று மாலை 2 ஆம்னி பஸ்கள் சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றது.

அதேபோல் கொடைக்கானலில் இருந்தும், உடன்குடியில் இருந்தும் 2 ஆம்னி பஸ்கள் சென்னைக்கு நேற்று மாலை புறப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த 4 ஆம்னி பஸ்களும் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

ஆலங்குளத்தில் இருந்து  சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் மீது நெல்லையில் இருந்து சென்ற ஆம்னி பஸ் மோதியது. அதன்பின்பு கொடைக்கானலில் இருந்தும் உடன்குடியில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ்சும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.

இந்த விபத்துகளில் 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை மற்றும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.