சென்னை,ஏப்.22: சிதம்பரம் மக்களவை தொகுதிகுட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும்என தலைமை தேர்தல்அதிகாரியைநேரில்சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தவைர் திருமாவளவன் மனு அளித்துள்ளார்.

சென்னை தலைமைசெயலகத்தில் தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து மனுஅளித்தார்.இதன்பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில்மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இதில் சிதம்பரம் மக்களவை தொகுதிகுட்பட்ட பொன்பரப்பியில் தலித் சமூகத்தினர் வாக்களிக்க முடியாத நிலையை பாமகவினர் ஏற்படுத்தி 200-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அம்மாவட்ட தேர்தல் அதிகாரியிடம்மனு அளித்தோம். 58 பிரிவின்படி வாக்குசாவடி மையத்திற்கு உள்ளே வன்முறை ஏற்பட்டால்மட்டுமே மறுவாக்குபதிவு நடத்த முடியும், வாக்குசாவடி மையத்திற்கு வெளியே வன்முறை நடந்துள்ளதால், மறுவாக்குபதிவு நடத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். இதனால் தலைமை தேர்தல் அதிகாரியை இன்று நேரில்சந்தித்து, பொன்பரப்பி வாக்களிக்க முடியாத நபர்களின் தனிதனி கோரிக்கை மனுவை நேரில் அளித்துள்ளோம்.அதன்படி 57 பிரிவின்படி வாக்குசாவடி மையத்திற்கு வெளியே வன்முறை நடந்து அதன் மூலம் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டால், மறுவாக்குபதிவு நடத்த வழிவகை உள்ளதை சுட்டிகாட்டிஉள்ளோம்.

ஆகவே பொன்பரப்பியில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கைவைத்து உள்ளோம். இதனை பரிசீலிப்பதாக ஆணையர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.