கோவை, ஏப்.23: சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் 09.04.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் 09.04.2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் கோயம்புத்தூர் மாவட்டம் முழுமைக்கும் அமலில் இருக்கும்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், நடத்தை விதிமீறல்கள் குறித் தான புகார்களை பொதுமக்கள் 1800 425 4757 எனும் கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.