புதுடெல்லி, ஏப்.23: பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மூத்த மகனும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் இன்று பிஜேபியில் சேர்ந்தார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் அவர் பிஜேபி சார்பில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே தர்மேந்திரா, ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி மதுரா தொகுதியில் பிஜேபியில் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.