காஞ்சியில்ஆலங்கட்டி மழை – சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

தமிழ்நாடு

காஞ்சிபுரம், ஏப்.23:  காஞ்சிபுரத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கோடை ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து நகரே குளிச்சியானது.

காஞ்சிபுரத்தில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் காவலன் கேட் பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் சாலையில் மரங்கள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் பலத்த மழை மற்றும் சூறைகாற்று காரணமாக மின்சாரம் துண்டிக்க பட்டது. இதனால் 3 மணி நேரம் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாயினர். மரம் விழுந்த இடங்களுக்கு உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து மரங்களை அகற்றினர். இந்த கோடை மழைக்காரணமாக நகரில் வெப்பம் ணிந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.