வாரணாசி, ஏப்.23: உத்தரப்பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, அத்தொகுதியில் வரும் 26-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
வாரணாசியில் மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை அவர் வரும் 26-ந் தேதி தாக்கல் செய்கிறார்.
இதையொட்டி வாராணசியில் 25-ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணி யில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி களின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங் களின் முதல்வர்களும் பேரணியில் கலந்து கொள்கின்றனர் என்று பிஜேபி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நலின் கோலி கூறுகையில், பிரதமர் மோடியை வரவேற்பதை வாராணசி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றார்.
வாரணாசி தொகுதிக்கு மே 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.