தாம்பரம்,ஏப். 23: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆலப்பாக்கத்தில் குடியிருப்புகள் அருகே சுற்றி திறிந்த முதலையை இளஞர்கள் பிடித்து வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை அடுத்த பெருங்களத்தூர் அருகே ஆலப்பாக்கம் பகுதியில் கடந்த இரண்டு தினங்கள் முன்பு குட்டையில் இருந்து சுமார் ஐந்து அடி நீளமுள்ள முதலை ஒன்று சாலையை கடந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அப்பகுதியினர் அச்சத்தில் ஆழ்ந்திருந்த நிலையில் மீண்டும் நள்ளிரவு அதே போன்ற முதலை ஒன்று சாø லயை கடந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி சென்றுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி இளஞர்கள் சிலர் காவல் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால் அப்பகுதி இளஞர்கள் சேர்ந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி முதலையை பிடித்து வாய் மற்றும் கால் பகுதியிகளை கட்டி வைத்தனர்.  பின்னர் வன விலங்குகள் மீட்பு குழுவின ருக்கு தகவல் அளிக்கபட்டதன் பேரில் அவர்கள் நேரில் சென்று முதலையை எடுத்து சென்றனர்.

மேலும் வெயிலின் தாக்கத்தால் குட்டையில் உள்ள நீர் வற்றி வருவதால் முதலைகள் ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளதாகவும் இது போல் பல முதலைகள் இருப்பதாகவும் அவற்றை வனதுறையினர் உடனடியாக பிடிக்க வேண்டும் என்றும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த முதலை அந்தபகுதியில் நாய், ஆடு, பன்றிகளை கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது.