புதுடெல்லி, ஏப்.24: என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோகித் சேகர் திவாரி (வயது 40) டெல்லியில்
வசித்து வந்தார்.

கடந்த 16-ந் தேதி மர்மமான முறையில் அவர் மரணமடைந்தார். பரிசோதனை அறிக்கையில், ரோகித் சேகர் திவாரி கழுத்து நெரிக்கப்பட்டதும், அவர் மூச்சுத் திணறி இறந்ததும் தெரியவந்தது.

அவருடைய மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ரோகித் சேகர் திவாரியின் மனைவி அபூர்வாவை போலீசார் கைது செய்துள்ளனர்.