புதுடெல்லி, ஏப்.24:பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தை மக்களவை தேர்தல் முடியும் மே 19-ந் தேதி வரை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த படத்தை வெளியிடுவதற்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், படத்தை பார்த்த பின்னர் அதுபற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், தேர்தல் முடிவுக்கு வரும் மே 19 வரை படத்தை வெளியிடக்கூடாது என பரிந்துரை செய்துள்ளது.