சென்னை, ஏப்.24: மே 5-ம் தேதி நடைபெற உள்ள வணிகர்கள் தின மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- மே-5ல் நடைபெறும் 36-வது மாநில மாநாடு இந்திய வணிகர் எழுச்சி மாநாடாக சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் மாபெரும் எழுச்சி மாநாடாக நடைபெற உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஜி.எஸ்.டி வரி குறைப்பு, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் வரிகுறைப்பு என நிறைவேற்றப் பட்டாலும், பெரும் பாலான கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மத்திய பிஜேபி அரசு தனது தேர்தல் அறிக்கையில் வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளான வணிகர்களுக்கு பென்ஷன் அளித்தல், 10 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீட்டுத்திட்டம், தேசிய வணிகநல வாரியம் அமைத்தல், பிணையில்லா 50 லட்சம் ரூபாய் கடன் உதவித்திட்டம், வணிகர்களுக்கான ஸ்மார்ட் கார்டு அளிக்கும் திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்கிறது. மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் இத்திட்டங்களை உறுதியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேரமைப்பு வலியுறுத்துகிறது.

இராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் மே 5ம்தேதி காலை 9 மணிக்கு வணிகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கி, இரவு 7 மணி வரை தொடர்ந்து மாநாடு நடைபெறும். 36வது மாநில மாநாடு வீழ்ந்து கிடக்கும் வணிகச் சமுதாயம் எழுச்சிபெற உத்வேகத்துடன் செயல்பட இம்மாநாடு அடித்தளமாக அமையும்.

இம்மாநாட்டில் நீதியரசர் டாக்டர் பி.ஜோதிமணி, விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, சிவத்திரு செ.ராஜேந்திரன் மிகிஷி, தொழிலதிபர் ஜெ.எம்.ஹாரூண் ணிஜ்.மற்றும் வணிகச் செம்மல்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.