விழுப்புரத்தில் மூன்று இடங்களில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தமிழ்நாடு

விழுப்புரம், ஏப்.24: விழுப்புரத்தில் மூன்று இடங்களில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். திருக்கோவிலூரில் வக்கீல் சங்க செயலாளர் செல்வக்குமார் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், அதனை கண்டித்தும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் நேற்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல் சங்க தலைவர் தமிழ்செல்வன் தலைமையிலும், திருக்கோவிலூரில் வக்கீல் சங்க தலைவர் அன்பு தலைமையிலும், உளுந்தூர்பேட்டையில் வக்கீல் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.