ஜூலையில் தொழில் வர்த்தக விருது வழங்கும் விழா

சென்னை

சென்னை ஏப்.24: மெட்ராஸ் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இதென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான எஸ்பிஆர் குழுமத்துடன் இணைந்து, மார்க்கெட் ஆஃப் இந்தியா டிரேடு அவார்ட்ஸ் என்ற விருதை வழங்கவிருப்பதை சென்னையில் இன்று அறிவித்திருக்கிறது.

இந்த அமைப்பின் வெள்ளிவிழா நடைபெறும் நிகழ்வையொட்டி இந்த விருது வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பு வந்திருக்கிறது. நியாயம், நேர்மை மற்றும் சமத்துவம் ஆகிய பண்பியல்புகளின் மீது ஒட்டுமொத்த வர்த்தக – தொழில் சமூகத்திற்குள் ஒரு பிணைப்பினை உருவாக்குவதே இந்த விருதுகள் வழங்கும் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

பிஎம்எம்எம்ஏ என்ற கூட்டமைப்பின் கீழ் இயங்கி வருகின்ற பல்வேறு வர்த்தக சங்கங்களிலிருந்து பெறப்படுகின்ற பரிந்துரைப்புகளின் அடிப்படையில் 15 மாறுபட்ட வகையினங்களின் கீழ், 40-க்கும் அதிகமான விருதுகள் வழங்கப்படவுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விருதுக்காக தேர்வு செய்யப்படவுள்ள வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.