சிதம்பரம்,ஏப். 24: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசன் நிருபர்களிடம் கூறுகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் துறையில் 1020 இடங்களுக்கு 2019 2020 ஆண்டுக்கான அட்மிஷன் சேர்க்கை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடைபெற உள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2019, 2020 ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மாணவர்கள் சேர்க்கை சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு உள்பட அனைத்து பாடங்கள் இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளது. அனைத்து பட்டப்படிப்புகளும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு படியும் தகுதி அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார்.