ஸ்ரீநகர், ஏப்.24:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனந்த்நாக் அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் அருகே பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை இந்திய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.