கொல்கத்தா , ஏப்.25: விருந்தினர்களை பரிசுகள், இனிப்புகள் கொடுத்து வரவேற்பதுதான் வங்காளத்தின் வழக்கம் என்று மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அளித்த ஒரு பேட்டியில், எதிர்க்கட்சிகளில் தனக்கு அதிக நண்பர்கள் இருப்பதாகவும், ஆண்டுதோறும் தமது பிறந்தநாளுக்கு மம்தா பானர்ஜி குர்தாக்களை பரிசாக அனுப்பி வருகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மோடியின் கருத்துக்கு மம்தா பானர்ஜி பதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து செராம்பூரில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

விருந்தினர்களை பரிசுகள், இனிப்புகள், தேநீர் கொடுத்து வரவேற்பது வங்காள கலாசாரம் ஆகும். சிறப்பு நிகழ்வுகளில் வாழ்த்துகளை தெரிவிப்பதும் வழக்கமாகும். இதுதான் எங்களின் பாரம்பரியம். இனிப்புகள், பரிசுகளை கொடுத்து விருந்தினர்களை வரவேற்றாலும், அவர்களுக்கு ஒரு வாக்கு கூட செலுத்த மாட்டோம் என்றார் மம்தா.