புதுடெல்லி, ஏப்.25:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. அவருக்கு பதி லாக அஜய்ராய் என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ளார்.

வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி நாளை தனது வேட்புமனு தாக்கல் செய்கிறார். கட்சி அனுமதித்தால் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்று பிரியங்கா கூறியிருந்தார். அதற்கேற்ப உத்தரபிரதேசத்தில் மற்ற பல தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் வாரணாசி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. இதனால் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட் டது.

இந்நிலையில் வாரணாசி தொகுதிக்கான வேட்பாளர் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அஜய்ராய் என்பவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள் ளது. இவர் கடந்த முறை மோடியை அதே தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது.