வாஷிங்டன், ஏப்.25:செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ’இன்சைட்’ விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள், பனிப்பாறை சரிவுகள், விண்கற்களின் தாக்குதல் போன்றவற்றை துல்லியமாக ஆய்வு செய்யவே இந்த இன்சைட் விண்கலம் ஏவப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலம் பதிவு செய்துள்ளது.