சென்னை, ஏப்.25: சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் அயோர்டிக் வால்வ் ஸ்டினோசிஸ் என்ற இதய வால்வு நோயினால் பாதிக்கப்பட்ட 82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு புதுவாழ்வை பரிசளித்திருக்கிறது.

அயோர்டிக் வால்வ் ஸ்டினோசிஸ் என்பது இதய வால்வ் தொடர்பான நோய் ஆகும். இந்நோய் பெரும்பாலும் வயதின் காரணமாக உண்டாகும். வயது மூப்பின் போது அயோர்டிக் வால்வ் செயல்பட்டு தேய்வதன் மூலம் பாதிப்படையும்.

மேலும் வால்வின் உள்பகுதியில் கால்சியம் படிவதால், வால்வின் உள்பகுதியில் அயோர்டிக் வால்வ் வாய்பகுதி அளவு குறுகிப் போய்விடும்.  மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஆகியன இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்நோயை கவனிக்காமல் விட்டுவிட்டாலோ, சிகிச்சை எடுத்து கொள்ளாமல் விட்டுவிட்டாலோ உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரல் டாக்டர்.சத்யபாலனுக்கு, சர்ஜிக்கல் வால்வ் ஃபெயிலியர் ஆனதால், அயோர்டிக் வால்வ் அடைப்பட்டு குறுகிப் போனதால் பாதிப்பு தீவிரமாக இருந்தது. இதனால் அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கைத் தரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.

நுரையீரல் வீக்கம் அடிக்கடி ஏற்பட்டது. வயது மூப்பின் காரணமாக டாக்டர் சத்யபாலனுக்கு  சிகிச்சையளிக்க பல மருத்துவ மனைகள் மறுத்துவிட்டன. இதனால்
சர்ஜிக்கல் வால்வ் பிரச்சனைகளுக்கு காரணமக அமைந்துவிட்டது.

இந்நிலையில் அவர் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்ல்ஸின் மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சாய்  சதீஷை சிகிச்சைப் பெறுவதற்காக அணுகினார். அதன் பின்னர் அவருக்கு ட்ரான்ஸ் கதீட்டர் அயோர்டிக் வால்வ் ரீப்ளேஸ்மெண்ட் மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை பெற்ற நோயாளி, முழு நினைவுடன் சிசியூ-க்கு மாற்றப்பட்டார். பின்பு அன்று மாலையே வழக்கமான வார்டுக்கு திரும்பினார். சிகிச்சை முடிந்த இரண்டாவது நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.