யுஹான், ஏப்.25: சீனாவில் நடந்து வரும் 39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-7 என்ற நேர் செட்டில் ஜப்பானின் சயாகா தகாஹஷியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில்இந்தியாவின் சாய்னா நேவால் 12-21, 21-11, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் யுவை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின்
சகாய் கஜூம சாவை வென்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.