ஆசிய தடகள போட்டி: கடைசி நாளில் இந்திய வீராங்கனைக்கு தங்கம்

உலகம் விளையாட்டு

தோகா, ஏப்.25: ஆசிய தடகள போட்டியில் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கம் வென்றார். கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளான நேற்று இந்தியாவின் பி.யூ.  சித்ரா 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 து 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4 து 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.

4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது
இடத்தை பிடித்தது.