மும்பை, ஏப்.8: உலகக்கோப்பைக்கான (2019) இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கப்படும் என இன்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிசிசிஐ சிஓஏ வினோத் ராய் மற்றும் குழு உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவி தோக்டே, தற்காலிக தலைவர் சிகே.கண்ணா, செயலாளர் அமிதாப், பொருளாளர் அனிருத் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் (மும்பையில்) இன்று நடைபெற்றது.
இதில், உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் 15-ல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4-வது இடத்திற்கான பேட்ஸ்மேனை தேர்வு செய்வது, ஆல்-ரவுண்டர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் சுற்று இடங்களை ஐதராபாத்தில் நடத்தவும், இறுதி ஆட்டத்தை மும்பையில் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கான ஸ்பான்சர்ஷிப் மற்றும் இதர பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.