புதுடெல்லி, ஏப்.26: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பாட்னாவுக்கு சென்றுக்கொண்டிருந்தபோது விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதையடுத்து டெல்லிக்கு விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.

ராகுல் காந்தி இன்று பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசாவின் பாலசோர் மற்றும் மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் கட்சியின் முக்கிய தலைவர்களும் சென்றனர். ஆனால், விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்துள்ளது.

இத்தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இன்று நடைபெறவிருந்த பிரச்சாரம் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும், சிரமத்திற்கு வருந்துவதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.