மும்பை, ஏப்.26:இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இவற்றை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை ஸ்டார் நெட்வோர்க் நிறுவனம் பெற்று ஒளிபரப்பி வருகிறது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல் 4 வாரங்களில் இந்த போட்டியை டிவி மற்றும் ஹாட்ஸ்டார் வழியாக 41 கோடியே 10 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

இவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 52% ஆகும். கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனை பார்த்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 41 கோடியே 40 லட்சம் பேர் ஆவர். அந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு முதல் 4 வாரத்திலேயே நெருங்கிவிட்டது, குறிப்பிடத்தக்கது.