எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘எனை சுடும் பனி’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர்.

இயக்குனர் கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார். கதா நாயகியாக உபாசனா ஆர்சி, சுமா பூஜாரி நடிக்கிறார்கள். சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, அருள்தேவ் இசையமைக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி ராம்ஷேவா இயக்குகிறார்.

இந்த படத்தின் துவக்கவிழா
சென்னையில் படப்பிடிப்புடன் நடைபெற்றது. படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது.