மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

அரசியல் சென்னை

சென்னை, ஏப்.26: 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதிமுக,திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார் என்று கட்சியின் தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

‘இந்த தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்க அறிவிப்பு வெளியிடவில்லை. அறிவிப்பு இல்லாமல் மாவட்ட செயலாளர்கள் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெற்றுதான் வேட்பாளர்கள் தேர்வு செய்துள்ளோம். தகுதியான, பலமான வேட்பாளர்களாக தான் இவர்கள் இருப்பார்கள்.

4 தொகுதிகளுக்கான தேர்தல் உள்பட இனிவரும் தேர்தல்களில் எங்கள் வியூகம் வேறு விதமாக இருக்கும்’ என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.