இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் ‘மெய்’

TOP-6 சினிமா

இயக்குநர்கள் சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் ‘மெய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படம் குறித்து இயக்குநர் கூறுகையில், ‘மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவத் துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும். நிச்சயம் இது சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்’ என்றார்.

வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அனில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார். இந்த அறிவிப்பு இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. மேலும் நாளை இந்தப் படத்தின் டீசர் வெளியாகிறது.