புதுச்சேரியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு

புதுச்சேரி, ஏப்.26: புதுச்சேரி மாநில காங்கிரஸ் செயற் குழு கூட்டம் சண்டே ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது.  இந்த கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், மாநில முதலமைச்சர் நாராயணசாமி சிறப்புரையாற்றினர்.

நாடாளுமன்ற வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

விழா கூட்டத்தில் அமைச்சர்கள்  ஷாஜகான், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ கே டி ஆறுமுகம், வீரராகவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.