புதுவை, ஏப்.27: பிரபல பன்னாட்டு தொழில் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 2-ம் தேதி புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

இது குறித்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரபல பன்னாட்டு தொழில் நிறுவனம் சார்பில், காலியாக உள்ள டேட்டா அசோசியேட்ஸ் பதவிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு முகாம் மே 2-ம் தேதி நடக்கவுள்ளது.

புதுவை பல்கலைக்கழக இந்தி துறையில் காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள நுழைவு தேர்வில் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை படிக்கவும், பிழையின்றி எழுதவும் நன்றாக பேசவும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கணினிகை கையாளும் திறன், எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையில் வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.