விழுப்புரம் ஏப். 27,  சின்னசேலம் அருகே பெட்ரோல் நிரப்பி சென்ற லாரிமீது பின்னால் வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த 3பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலத்த காயம் அடைந்த 4பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சேலம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் வயது 40 மற்றும் அவரது ஆறு நண்பர்கள் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த தாஸ் (வயது 37, )சேலம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (வயது 32 ), கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த சுனில் (வயது 37, )மன்னார்குடி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 37,) சேலம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 35,) கேரளா பகுதி கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 28 ) ஆகிய 7 பேரும் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு சென்னையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்து கன்னியமூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 6 மணியளவில் அதே பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் டாரஸ் லாரியை சின்னசேலம் பகுதி பெரியசாமி மகன் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு, சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த ஸ்கார்பியோ கார் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேலம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், சேலம் பகுதியை சேர்ந்த அருண்குமார், கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த
சதீஷ், ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் காரில் பயணம் செய்த தாஸ், மகாலிங்கம்,சுனில் , கண்ணதாசன், ஆகியோர் பலத்த படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்,  இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.