சென்னை, ஏப்.28:தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தின் கடைசி செயற்குழுக் கூட்டம் நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர் மற்றும் பொன்வண்ணன், நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடத்துவதுப் பற்றி ஆலோசிக்கப் பட்டதாக கூறினர்.

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப் படும் என்றும், ஓய்வுப் பெற்ற நீதிபதி யைக் கொண்டு தேர்தல் நடைபெறும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் துருக்கியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும், இதே போல் நடிகர் கார்த்தியும் படப் பிடிப்பில் ஈடுபட்டுள்ளதால் வர இயலவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

நடிகர் சங்க கட்டிடப்பணிகள் தீவிர மாக நடந்து வருகிறது என்று கூறிய நடிகர் பொன்வண்ணன், இந்த நிர்வாக பதவி காலத்திற்குள்ளாகவே அதை கட்டி முடிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார். புதிய நிர்வாகக் குழு பதவியேற்றதும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.