வாரணாசியில் மோடி 26-ம் தேதி மனுத்தாக்கல்

இந்தியா

வாரணாசி, ஏப்.8:  உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 26-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 22-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 26-ஆம் தேதி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டபின்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.