தவுஹித் அமைப்புக்கு இலங்கையில் தடை

உலகம்

கொழும்பு, ஏப்.28: இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்நாட்டில் செயல்பட்டு வந்த தேசிய தவுஹித் ஜமாத் (என்டிஜெ) மற்றும் ஜமாதி மிலாது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சிறிசேனா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அதிபர் மாளிகையில் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கப்படும்.