சென்னை,ஏப்.29:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமச்சீர் கல்வி முறையில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி முதல் 29 வரை நடைபெற்றன. அந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 9.97 லட்சம் பேரில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.3 சதவீதம் பேராகும். மாணவிகள் 97 சதவீதம் பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாகவும், மாணவ- மாணவியருக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பப்பட்டு வருகின்றன. 98.53 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. பிளஸ்-2 தேர்விலும் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்து.