மதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியின் செயினை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் மூதாட்டி ஒருவர் நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் மூதாட்டியின் அருகில் வந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை அறுத்துகொண்டு தப்பியோடினர். அந்த வாலிபர்கள் தலைகவசம் அணியாமல் துணிச்சலாக போலீசுக்கே சவால் விடுக்கும் அளவுக்கு செயினை பறித்துச் சென்ற காட்சி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.