புதுடெல்லி, ஏப்.29: பானி புயல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் பானி புயலால் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் பானி புயல் தாக்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் மக்களின் பாதுகாப்புக் காகவும் தான் கடவுளிடம் வேண்டிக்கொள்வதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.