கொல்கத்தா, ஏப்.29:மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இன்று 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் 4வது கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன. ஒடிசாவில் எஞ்சிய 41 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் நடத்தப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், எஸ்எஸ் அலுவாலியா, அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ், நடிகை ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்ட 961 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.
4-வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.பல்வேறு மாநிலங்களில் பல இடங் களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக காணப்பட்ட போதிலும், வேறு சில மாநிலங்களில் மிதமான வாக்குப்பதிவே நடந்தது.

இந்த 72 தொகுதிகளில் 12.79 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 15 சதவீதமும் ராஜஸ்தானில் 18 சதவீதமும் வாக்கு கள் பதிவாகி இருந்தன. மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக மந்தமான வாக்குப் பதிவு காணப்பட்டது. அங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப் பதிவு சூடுபிடித்து விறுவிறுப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிதேசத்தில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். இந்த தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 50 வயது பெண் ஊழியர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் விறுவிறுப் பான வாக்குப்பதிவு இருந்தபோதிலும் அசன்சால் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ், பிஜேபி தொண்டர்களி டையே மோதல் வெடித்தது. இதில் பிஜேபி எம்பி பாபுல் சுப்ரியோவின் கார் தாக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி வன்முறை யாளர்களை கலைத்தனர்.
மத்திய பிரதேசத்தில் பாலக்காட் மக்களவை தொகுதிக்குட்பட்ட இட மொன்றில் சுயேச்சை வேட்பாளரின் காருக்கு நக்சலைட் தீவிரவாதிகள் தீ வைத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.