செல்வராகவன் எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு: சூர்யா

சினிமா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள என்ஜிகே படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசும்போது, செல்வராகவனின் இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு.

செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன். யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். என்னுடைய துறையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

விழாவில் பாடலாசிரியர் உமாதேவி, எடிட்டர் பிரவின், கலை இயக்குநர் விஜயமுருகன், நடிகைகள் சாய்பல்லவி, உமா பத்மநாபன், ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், நடிகர்கள் சிவக்குமார், தலைவாசல் விஜய், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.